Easy Tutorial
For Competitive Exams
GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test Yourself Page: 3
56072.ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி திப்பு எந்தப்பகுதியை இழந்தார்?
குடகு
பாராமஹால்
மலபார்
திண்டுக்கல்
Explanation:

திப்புவிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளும் இழப்பீட்டுத்தொகையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டன. ஆங்கிலேயர் மலபார், திண்டுக்கல், பாராமஹால் ஆகிய பகுதிகளைப் பெற்றார்கள். திப்பு குடகுப் பகுதியை இழந்தார். அதன் அரசர் ஆங்கிலேயருக்குக் கீழ்ப்படிய வேண்டிய சிற்றரசர் ஆனார். திப்புவின் அதிகாரம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டது.
56073.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. சென்னையில் பிணைக்கைதிகளாகயிருந்த திப்புவின் மகன்கள் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு 1794 ஆம் ஆண்டு மே 29 அன்று திருப்பியனுப்பி வைக்கப்பட்டார்கள்.
ii. சென்னை உடன்படிக்கை மூலம் ஏற்பட்ட அவமானத்தையும் பொருளாதார இழப்பையும் திப்புவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

சென்னையில் பிணைக்கைதிகளாகயிருந்த திப்புவின் மகன்கள் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு 1794 ஆம் ஆண்டு மே 29 அன்று திருப்பியனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த உடன்படிக்கை மூலம் ஏற்பட்ட அவமானத்தையும் பொருளாதார இழப்பையும் திப்புவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
56074.குத்தகை இல்லாத நிலங்களை வைத்திருப்போர் பற்றி விசாரிக்க இனாம் கமிஷனை எந்த அரசு அமைத்தது?
பம்பாய் அரசு
சென்னை அரசு
கல்கத்தா அரசு
டெல்லி அரசு
Explanation:

டல்ஹௌசி வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் மூலமாக அவத்தையும் ஜான்சியையும் இணைத்ததும், கடைசி பேஷ்வாவின் சுவீகார மகனான நானா சாகிபை அவமானகரமாக நடத்தியதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. முறையான உரிமம் இல்லாமல், குத்தகை இல்லாத நிலங்களை வைத்திருப்போர் பற்றி விசாரிக்க பம்பாய் அரசு அமைத்த இனாம் கமிஷனின் (1852) அறிக்கையின்படி 21,000க்கும் மேற்பட்ட தோட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
56075.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. மைசூர் அரசர் ஒன்பதாம் சாமராஜ் 1796இல் இறந்தார்.
ii. பிரான்ஸிடமிருந்து உதவி கிடைத்த பிறகு திப்பு ஆங்கிலேயர் மீதான போர் குறித்து அறிவிப்பார் என்பதே மாலரிக்கின் அறிவிப்பாகும்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

மைசூர் அரசர் ஒன்பதாம் சாமராஜ் 1796இல் இறந்தார். அடுத்த அரசரை நியமிக்கும் முறையான வழக்கத்தைத் திப்பு பின்பற்றவில்லை. அவர் இந்தத் தீர்மானத்துக்கு வந்த அதே நேரத்தில், பிரெஞ்சு காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த மொரீஷியஸின் கவர்னர் மாலரிக் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். பிரான்ஸிடமிருந்து உதவி கிடைத்த பிறகு திப்பு ஆங்கிலேயர் மீதான போர் குறித்து அறிவிப்பார் என்பதே மாலரிக்கின் அறிவிப்பாகும்.
56076.நான்காம் மைசூர் போர் ஏற்பட்டதற்கான காரணங்கள்?
ⅰ) திப்பு 1798 ஜுலையில் பிரான்சு ஆட்சியை நிர்வகித்த இயக்குநரகத்துடன் மேற்கொண்ட கடிதத் தொடர்புகள்
ⅱ) நெப்போலியனுடன் மேற்கொண்ட கடிதத் தொடர்புகள்
ⅲ) வெல்லெஸ்லியுடனான கடிதத்தொடர்பில் காட்டிய நழுவல்
ⅰ), ⅱ), ⅲ)
ⅰ), ⅱ)
ⅱ), ⅲ)
ⅰ), ⅲ)
Explanation:

திப்பு 1798 ஜுலையில் பிரான்சு ஆட்சியை நிர்வகித்த இயக்குநரகத்துடனும் அதற்குப் பிறகு அங்கு ஆட்சியைப் பிடித்த நெப்போலியனுடனும் மேற்கொண்ட கடிதத் தொடர்புகள், அவர் வெல்லெஸ்லியுடனான கடிதத்தொடர்பில் காட்டிய நழுவல் ஆகியவை ஆங்கிலேயரை மீண்டும் திப்புவுக்கு எதிரான போரை அறிவிக்கச் செய்தன.
56077.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. 1796இல் திப்பு பாரிஸுக்கு மீண்டும் தூதர்களை அனுப்பினார்.
ii. 1797இல் திப்புவை மொரிஷியஸிலிருந்து வந்த ஒரு பிரெஞ்சு தூதர் சந்தித்து, பிரான்சின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

நான்காம் மைசூர் போர் 1799: திப்பு தனது படையையும் நிதியாதாரங்களையும் வலுப்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். 1796இல் பாரிஸுக்கு மீண்டும் தூதர்களை அனுப்பினார். 1797இல் அவரை மொரிஷியஸிலிருந்து வந்த ஒரு பிரெஞ்சு தூதர் சந்தித்து, பிரான்சின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.
56078.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. ஜுலை 11 அதிகாலையில் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டிய படைப்பிரிவின் தலைவர்கள் ஜுலை 10 ஆம் நாள் இரவே கோட்டையில் தூங்குவதற்கு அதைச் சாக்காகப் பயன்படுத்தினர்.
ii. துணை இராணுவ அதிகாரி கோட்டைக்குள் பாதுகாவலர்களாகத் தன்னால் இயன்றவரை தன்னுடைய ஆதரவாளர்களையே நியமித்தார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

ஜுலை 10 அதிகாலையில் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டிய படைப்பிரிவின் தலைவர்கள் ஜுலை 9 ஆம் நாள் இரவே கோட்டையில் தூங்குவதற்கு அதைச் சாக்காகப் பயன்படுத்தினர். இந்தத் துணை இராணுவ அதிகாரி கோட்டைக்குள் பாதுகாவலர்களாகத் தன்னால் இயன்றவரை தன்னுடைய ஆதரவாளர்களையே நியமித்தார்.
56079.திப்புவின் மகன்கள் முதலில் எங்கு சிறைவைக்கப்பட்டார்கள்?
கல்கத்தா
வேலூர்
திண்டுக்கல்
ஸ்ரீரங்கப்பட்டணம்
Explanation:

திப்புவை அகற்றியதும் உடையார் வம்சத்தினரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதும் தென்னிந்தியாவில் கம்பெனி ஆட்சியின் உண்மையான தொடக்கமாக அமைந்தன. திப்புவின் மகன்கள் முதலில் வேலூரில் சிறைவைக்கப்பட்டார்கள்.
56080.திப்புவின் மகன்கள் வேலூர் கிளர்ச்சிக்குப் பிறகு எங்கு மாற்றப்பட்டார்கள்?
கல்கத்தா
வேலூர்
திண்டுக்கல்
ஸ்ரீரங்கப்பட்டினம்
Explanation:

1806இல் வேலூர் கிளர்ச்சிக்குப் பிறகு கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டார்கள். இவ்வாறு ஆங்கிலேயருக்கு எதிரான மைசூர் சுல்தான்களின் வீரம் செறிந்த மோதல்கள் முடிவுக்கு வந்தன.
56081.விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அரசப்பிரதிநிதியாக மதுரைக்கு வந்தவர்?
கோபால நாயக்கர்
நாகம நாயக்கர்
விஜய ரங்க சொக்கநாதர்
திருமலை நாயக்கர்
Explanation:

விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அரசப்பிரதிநிதியாக மதுரைக்கு வந்த நாகம நாயக்கரும் அவருடைய மகன் விஸ்வநாத நாயக்கரும் மதுரை, திருநெல்வேலி ஆகியவற்றின் சுதந்திரமான ஆட்சியாளர்களா கத் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டனர்.
Share with Friends